சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு ஒருநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்ட பெண்மணி ஒருவர், சுற்றுலா நிறுவனத்தின் ஆப்-ஐ தனது மொபைலில் இன்ஸ்டால் செய்ததன் மூலம் சுமார் 110,960 சிங்கப்பூர் டாலர் பணத்தைப் பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் இணைய உலகில் எங்கு காணினும் கவர்ச்சிகர விளம்பரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதில் பெரும்பாலனவை வெற்று ஏமாற்றுவேலை என்பது நாம் ஏமாறும் வரை தெரிவதில்லை. எவ்வளவோ விழிப்புணர்கள் செய்தபோதிலும் சிலர் இதுபோன்ற மலிமாவன விளம்பரங்களில் சிக்கி பணத்தை இழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றது.
இதேபோல், சிங்கப்பூரைச் சேர்ந்த லை என்ற பெண்மணி, ஒருநாள் மலேசியா சுற்றுலா செல்ல ஆசைப்பட்டு, தேவையற்ற ஆப்-ஐ அவரது மொபைலில் இன்ஸ்டால் செய்ததன் மூலம் 110,960 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 67 லட்சம்) பணத்தை பறிகொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் ‘ஜிடி டிராவல்ஸ் & டூர்ஸ்’ என்ற சுற்றுலா நிறுவனம், வெளியிட்ட ‘மலேசியாவின் கூலாய்க்கு $28 டுரியான் பகல்நேரச் சுற்றுப்பயணம்’ என்னும் கவர்ச்சி விளம்பரத்தை ஒளிபரப்பியது. இதை நம்பிய லை என்ற பெண்மணி அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டதாக தெரிகிறது.
பின்னர், அந்நிறுவனத்தினர் லைக்கு வாட்ஸ்அப்பில் சில குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. அதன்படி, சுற்றுலா குறித்த சலுகைகளை அறிய அவரது மொபைலில் ‘இஜி ஸ்டோர்’ என்ற மூன்றாம் தரப்புச் செயலியை (EG Store App) இன்ஸ்டால் செய்யுமாறு அது அறிவுறுத்தியது.
சிங்கப்பூரில் விரைவில் இரு கட்டங்களாக உயரப்போகும் தண்ணீர் கட்டணம்! முழு விபரம் உள்ளே!
அதன்படி லையும், அந்தச் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் அந்த நிறுவனத்திற்கு பணமோ, அல்லது சுற்றுலாவிற்கான ஒப்புதலோ எதுவும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். வங்கி விவரங்கள் குறித்து அந்நிறுவனத்திடம் அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஒரு வாரம் கழித்துத் தனது வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்த சென்ற போது தான் தன் இரு வங்கிக் கணக்குகளிலும் பணம் இல்லை என்பதை அறிந்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D