2 மாத கைக்குழந்தையுடன்...தரையில் அமர்ந்து தேர்வெழுதிய பெண்..!

 
Published : Mar 22, 2018, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
2 மாத கைக்குழந்தையுடன்...தரையில் அமர்ந்து தேர்வெழுதிய பெண்..!

சுருக்கம்

a girl written the exam with her 2 months babe in afkhan

2 மாத கைக்குழந்தையை மடியில் வைத்தவாறே தேர்வெழுதிய பெண்..!

ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவர்,தன்னுடைய இரண்டு மாத கைக்குழந்தையை மடியில் வைத்தவாறே தேர்வெழுதிய புகைப்படம் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு நடைபெற்றது. இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் கலந்துக் கொண்டு தோ்வு எழுதினார் 

 

ஜகான் டாப் என்ற அந்த பெண் தேர்வெழுதிய சமயத்தில் அவருடைய இரண்டு மாத கைக்குழந்தை  அழுதுள்ளது

உடனே தன் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே தேர்வு எழுதினார்.அப்போது இதனை கண்ட தோ்வு கண்காணிப்பாளா் அப்பெண்ணை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு  உள்ளார். இந்த புகைப்படத்தை பெரும்பாலோனோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இத்தாலியில் மலையில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள்! 21 கோடி ஆண்டுகள் பழமையானது!
புயல் காரணமாக சரிந்த சுதந்திரச் சிலை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.. வெளியான ஷாக் வீடியோ!