அலபாமா சிறையில் கை, கால்ககளைக் கட்டி நைட்ரஜன் வாயுவை மட்டும் சுவாசிக்கச் செய்து, கென்னத்தின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கென்னத்தின் உயிர் பிரிய 22 நிமிடங்கள் ஆனதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் முதல் முறையாக கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் சார்லஸ் சென்னட் என்பவர் தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காக, அவரைக் கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார். மனைவியைக் கொல்வதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் என்ற இரண்டு பேரை ஏற்பாடு செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் சென்னட் சொன்னபடி எலிசபெத்தை அடித்துக் கொன்றுவிட்டனர். ஆனால், மனைவி கொல்லப்பட்ட சில மாதங்களில் சென்னட்டும் தற்கொலை செய்துக்கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் எலிசபெத்தைக் கொன்ற கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
'வீடு வாங்கினால் மனைவி இலவசம்!' சர்ச்சையைக் கிளப்பிய ரியல் எஸ்டேட் விளம்பரம்!
இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு ஜான் பார்க்கருக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர், 2022ஆம் ஆண்டு கென்னத்தின் மரண தண்டனையை ஊசி மூலம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஊசி போடுவதற்கு உரிய நரம்பை கண்டுபிடிக்க இயலாத சூழலில் மரண தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி கென்னத்தின் மரண தண்டை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுதான் முதல் முறை என்று சொல்லப்படுகிறது. அலபாமா சிறையில் கை, கால்ககளைக் கட்டி நைட்ரஜன் வாயுவை மட்டும் சுவாசிக்கச் செய்து, கென்னத்தின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கென்னத்தின் உயிர் பிரிய 22 நிமிடங்கள் ஆனதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் எதிரொலியாக, நைட்ரஜன் வாயுவால் மரண தண்டனையை நிறைவேற்றும் முறைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு கொடூரமான முறை என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐ.நா. சபையும் இந்த முறையை குரூரமானது என்றும் மனிதநேயமற்றது என்றும் கண்டித்துள்ளது.
அடேங்கப்பா... சொர்க்கத்தையே கப்பலில் இறக்கிட்டாங்க! முதல் பயணத்தைத் தொடங்கிய பிரம்மாண்ட கப்பல்!