6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
ஜப்பானில் இன்று விடியற்காலை அதிர்ச்சி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆனது ஐவாட் ப்ரிபெக்ச்சரின் வடக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உடனடியாக சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..