157 வயதில் 36,000 டாலர் கடன் வாங்கிய நபர்! எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு!

எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க செயல்திறன் துறை, சிறு வணிகக் கடன்களுக்கு வயது வரம்பு விதித்துள்ளது. 18 வயதுக்குக் குறைவான மற்றும் 120 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

A 157 years old received $36,000 loan, Elon Musk lead DOGE halts SBA for babies and dead sgb

எலான் மஸ்க்கின் சிந்தனையில் உருவான அரசாங்க செயல்திறன் துறை (DOGE), 18 வயதுக்கு உட்பட்ட மற்றும் 120 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு சிறு வணிக நிர்வாகம் (SBA) மூலம் கடன் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஏ. (SBA) வலைத்தளத்தில் நேரடி கடன் கோரி விண்ணப்பிக்கும் அனைவரும் தங்கள் பிறந்த தேதியை வழங்க வேண்டும் என்று செயல்திறன் துறை கூறியுள்ளது. மேலும், விண்ணப்பதாரர் 18 வயதுக்குக் குறைவானவராகவோ அல்லது 120 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Latest Videos

இது மோசடியாக அரசாங்கப் பணத்தைப் பெறுவதைத் தடுக்கும் என்றும் செயல்திறன் துறை கருதுகிறது. "இதுபோன்ற அடிப்படை சோதனைகள் அரசாங்க கட்டணத் திட்டங்களில் மோசடியைக் குறைப்பதற்கான ஆரம்ப படிகள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் இந்தப் பதிவைப் பகிர்ந்து, சிறு வணிக நிர்வாகம் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ளார். இனி குழந்தைகளுக்கு அல்லது உயிருடன் இருக்க வாய்ப்பில்லாத அளவுக்கு வயதானவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு கடன் கிடைக்காது என்று கூறியுள்ளார். திருடப்பட்ட சமூகப் பாதுகாப்பு எண்கள் போலியான கடன்களைப் பெறப் பயன்படுத்தப்படுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த AI பூங்கா! என்னென்ன இருக்கு பாருங்க!

கடன்களுக்கு வயது வரம்பை நிர்ணயித்தது ஏன்?

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க அரசின் செயல்திறன் துறை 2020-21ஆம் ஆண்டில் எஸ்.பி.ஏ. மூலம் வழங்கப்பட்ட கடன்கள் குறித்த தரவை வெளியிட்டது. இது கடன் வழங்குவதில் நடந்துள்ள முறைகேடுகளை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கப் பதிவுகளின்படி, 115 வயதுக்கு மேற்பட்ட கடன் விண்ணப்பதாரர்களுக்கு $333 மில்லியன் மதிப்புள்ள 3,095 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 157 வயதுடைய ஒருவர் $36,000 கடன் பெற்றதாகக் கணக்கு வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், சமூகப் பாதுகாப்பு தரவுத்தளம் இன்னும் பல லட்சம் மக்கள் 100 வயதுக்கு மேல் ஆகியும் உயிருடன் இருப்பதாகக் கருதுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த நிலையில், மோசடியான கடன் வழங்கல் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதில் எலான் மஸ்க் தலைமையிலான செயல்திறன் துறை கவனம் செலுத்துகிறது.

அடுத்த ஆண்டுக்கு ரூ.5258 கோடி பட்ஜெட்; திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

vuukle one pixel image
click me!