ஒரே நாளில் கர்ப்பமான ஒரே மருத்துவமனையின் 9 நர்சுகள்... ஒரே நாளில் குழந்தைகள் பெற்று சாதனை..!

By Thiraviaraj RM  |  First Published Aug 19, 2019, 2:41 PM IST

ஒரே நாளில் கர்பமாகி ஒரே நாளில் குழந்தை பெற்ற 9 செவிலியர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 
 


ஒரே நாளில் கர்பமாகி ஒரே நாளில் குழந்தை பெற்ற 9 செவிலியர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில், போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள மைன் மெடிக்கல் செண்டர் என்கிற தனியார் மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் பணிபுரியும், எரின் க்ரினியர், ரேச்சல் ஸ்டெல்மக், பிரிட்னி விர்வைல், லோனி சூசி, அமண்டா ஸ்பியர், சமந்த கிகிலியோ, நிக்கோல் கோல்ட்பர்க், நிக்கோல் பார்ன்ஸ் மற்றும் ஹாலி செல்பி என்ற 9 செவிலியர்கலும் ஒரே நாளில் கர்பமான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Latest Videos

இதனை கொண்டாடும் விதமாக அந்த 9 செவிலியர்களும் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இந்தப் புகைப்படம் சமூகவளைதலத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், தற்போது அந்த 9 செவிலியர்களும் மூன்று மாதத்துக்கு முன் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். அந்த குழந்தைகளின் புகைப்படத்தையும் அதே மருத்துவ மையம், தங்கள் சமூக வலைத்தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. 

click me!