இங்கிலாந்தில் கொரனாவுக்கு அடுத்தடுத்து 8 மருத்துவர்கள் பலி.!! இந்தியாவை சேர்ந்த மருத்துவரும் உயிரிழந்தார்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 11, 2020, 6:24 PM IST
Highlights

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி  வரும் நிலையில் பிரிட்டனில் கொரோனா வார்டில் பணியாற்றிய 8 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் ,  இது மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது .  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி  வரும் நிலையில் பிரிட்டனில் கொரோனா வார்டில் பணியாற்றிய 8 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் ,  இது மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது .  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் அமெரிக்கா ,  இத்தாலி , ஸ்பெயின்  பிரிட்டன் ,  ஜெர்மனி போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது இந்நிலையில் பிரிட்டனையும் கொரோனா கொடூரமாக தாக்கி வருகிறது ,  அங்கு இதுவரையில் 73 ஆயிரத்து 758 பேருக்கு  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது , 1,958 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . 

 

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,  போதிய அடிப்படை வசதிகள் இன்றி  மருத்துவமனையில் உள்ளதாகவும் , போதிய பாதுகாப்பு உபகரணங்களை உடற் கவசங்களோ இல்லாமல் தாங்கள் பணியில் ஈடுபடுத்தபடுவதாகவும் அந்நாட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார் 8 மருத்துவர்கள் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது ,  உயர்ந்தவர்கள் அனைவரும்  வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பணி நிமித்தமாக இங்கிலாந்தில் அவர்கள் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்ததாகவும்  கூறப்பட்டுள்ளது .   குறிப்பாக பலதுறைகளில் கோலோச்சும் பிரிட்டனில் உள்நாட்டு மருத்துவர்கள் எண்ணிக்கை என்பது மிகக் குறைவு ,  எனவே பிரிட்டன் சுகாதாரத்துறை வெளிநாட்டு மருத்துவர்களை சார்ந்தே உள்ளது .

 

கிட்டதட்ட 43 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர் , இங்கிலாந்தில் பணியாற்றும் பெரும்பாலான மருத்துவர்கள் இந்தியா ,  பாகிஸ்தான் , இலங்கை,   சூடான் ,  நைஜீரியா , உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச்  சேர்ந்தவர்களாக உள்ளனர்.  இந்நிலையில்  போதிய பாதுகாப்பு உபரகணங்கள் இன்றி சிகிச்சையில்  ஈடுபட்டதால் மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது . அதில் இந்தியாவைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்  ஜிதேந்தர் ரத்தோட் (62) என்பவரும் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.   இங்கிலாந்தில் பணியாற்றிவரும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களில்  20 சதவீத த்திற்கும் அதிகமானோர் தெற்காசி நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். 

இந்நிலையில் மருத்துவர்கள் உயிரிழப்பு குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு, இங்கிலாந்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கு இங்கிலாந்து தலைவணங்குகிறது, உயிர் நீத்த மருத்துவர்களின் அர்ப்பணிப்பை இங்கிலாந்து என்றும் மறவாது என உருக்கமாக தெரிவித்துள்ளது .கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் விவரம் :- இறந்த எட்டு மருத்துவர்கள் 55 வயதான அம்ட் எல்-ஹவ்ரானி மற்றும் சூடானைச் சேர்ந்த ஆதில் எல் தயார் (64); பாகிஸ்தானைச் சேர்ந்த பொது பயிற்சியாளர் ஹபீப் ஜைதி, (76) ,  நைஜீரியாவைச் சேர்ந்த வயதான மருத்துவர் ஆல்ஃபா சாது, (68) , இந்தியாவைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திர ரத்தோட், (62) அன்டன் செபாஸ்டியன் பிள்ளை, (70) இவர் இலங்கையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஆவர்,  எகிப்தைச் சேர்ந்த மார்பக திசு நிபுணர் முகமது சாமி ஷோஷா, (79) மற்றும் சையத் ஹைதர், (80) பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர் என தெரிய வந்துள்ளது.  
 

click me!