ராணுவத்துடன் சரமாரி துப்பாக்கிச்சூடு..! 7 தலீபான் தீவிரவாதிகள் பலி..!

Published : Jan 26, 2020, 04:07 PM IST
ராணுவத்துடன் சரமாரி துப்பாக்கிச்சூடு..! 7 தலீபான் தீவிரவாதிகள் பலி..!

சுருக்கம்

கஜினி மாகாணம், ஆண்டார் மாவட்டத்தில் நனாய் கிராமம் இருக்கிறது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று காலை இந்த கிராமத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்தனர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. ராணுவத்தின் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்னர்.

அங்கு கஜினி மாகாணம், ஆண்டார் மாவட்டத்தில் நனாய் கிராமம் இருக்கிறது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று காலை இந்த கிராமத்தில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்தனர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். ராணுவத்தின் அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கமுடியாமல் எஞ்சிய தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.

பலியான தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கி சண்டை குறித்தோ தீவிரவாதிகளின் உயிரிழப்பு குறித்தோ தலீபான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Also Read: கம்பீரமாய் வந்த அய்யனார்..! தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..!

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!