துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு...! |

By vinoth kumarFirst Published Jan 26, 2020, 1:57 PM IST
Highlights

துருக்கி நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.  அங்கு 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 17,000 பேர் உயிரிழந்தது வரலாற்று சோகமாக அமைந்துள்ளது. இதற்கிடையே, அங்குள்ள இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

துருக்கியில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

துருக்கி நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.  அங்கு 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 17,000 பேர் உயிரிழந்தது வரலாற்று சோகமாக அமைந்துள்ளது. இதற்கிடையே, அங்குள்ள இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் முக்கிய நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகின்றனர். 

click me!