பூமியை இன்னொரு ஆபத்து! 25,000 கி.மீ. வேகத்தில் நெருங்கும் 620 அடி சிறுகோள்!! நாசா எச்சரிக்கை

By SG Balan  |  First Published Aug 19, 2024, 8:25 PM IST

620 அடி அளவுள்ள சிறுகோள் 2024 JV33 பூமியை 2,850,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் அப்போலோ குழுவைச் சேர்ந்தது. பூமிக்கு அருகில் உள்ள வான்பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது.


பூமிக்கு அருகில் உள்ள 2024 JV33 என்ற சிறுகோள் குறித்து நாசா அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தச் சிறுகோள் ஆகஸ்ட் 19ஆம் தேதி பூமியை நெருக்கமாகக் கடந்து செல்லக்கூடும் என்று கூறியுள்ளது.

2024 JV33 சிறுகோள், சுமார் 620 அடி விட்டம் கொண்ட கட்டிடத்தின் அளவு இருக்கிறது. தோராயமாக 2,850,000 மைல்கள் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த சிறுகோள் அப்போலோ குழுவின் ஒரு பகுதியாகும். இது பூமியின் சுற்றுப்பாதையை கடப்பதற்கான வாய்ப்பு உள்ள சிறுகோள்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் மணிக்கு 24,779 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த சிறுகோள் பூமிக்கு நெருக்கமாக வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது

மாதம் ரூ.10 லட்சம்... புது வீடு... யூடியூப் சேனல் தொடங்கி சொகுசாக செட்டில் ஆன லாரி டிரைவர்!

ஆனால், நிலவு இருக்கும் தூரத்தை விட மூன்று மடங்கு அதிக தொலைவில் கடந்து செல்லும் என நாசா கூறியுள்ளது. இந்தச் சிறுகோளின் நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் நாசா கூறியுள்ளது.

கணிசமான தூரத்தில் இருந்தாலும், 2024 JV33 பூமிக்கு அருகில் உள்ள வான்பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த சிறுகோளின் நகர்வுக்கு கவனமான கண்காணிப்பு தேவைப்படுகிறது.

நாசா, பல்வேறு விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களைக் கண்காணிக்கிறது. இதற்காக தொலைநோக்கிகள் மற்றும் கணினிகள் என அதிநவீன நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது. NEO எனப்படும் பூமிக்கு நெருக்கமான வான்பொருட்கள் பெரும்பாலும் பூமியில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்கின்றன. ​​7.5 மில்லியன் கிலோமீட்டருக்குள் வரும் மற்றும் 460 அடிக்கு (140 மீட்டர்) அதிகமான அளவுள்ளவை அதிக கவனத்தைப் பெறுகின்றன.

நாசாவில் உள்ள பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களுக்கான ஆய்வு மையம் (CNEOS) விண்வெளியில் உள்ள இந்த சிறுகோள்களை உன்னிப்பாகக் கண்காணிப்பது, அவை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை மதிப்பிட்டு எச்சரிப்பது ஆகியவற்றைச் செய்துவருகிறது.

Photography Day: மொபைல் கேமராவில் சூப்பரா போட்டோ எடுக்கணுமா? எந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

click me!