மெக்சிகோ நாட்டில் உள்ள இரு பழங்கால பிரமிடுகளில் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி பழங்குடி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது ஒரு “கெட்ட சகுணம்” என்றும், பூமிக்கு கெட்டகாலம் தொடங்கியாச்சு என்றும் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகளைக் கடந்து வாழும் தஞ்சை பெரிய கோவில் போன்று, மெக்சிகோவிலும் ஆயிரம் ஆண்டுகளை கடந்த இரண்டு பழங்கால பிரமிடுகள் இருந்தன.இதில் ஒன்று கனமழை காரணமாக இடிந்து சரிந்து விழுந்தது. இந்த பிரமிடு சரிந்து விழுந்த சம்பவம் அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்கள் அதனை “கெட்ட சகுணம்” என கருதுகின்றனர். மேலும், பூமியின் கெட்ட காலம் தொடங்கியாச்சு என்றும் தெரிவிக்கின்றனர்.
அஸ்டெக் (Aztecs) இன பழங்குடி மக்களை தோற்கடித்த புரேபெச்சா (Purepecha ) பழங்குடியினர். அப்பகுதியை 400 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகிறது. அக்காலகட்டத்தில் தான் இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன.
ஒரு காலத்தில் அஸ்டெக் மக்கள் கடவுளாக நினைத்த சூரியனுக்காக கட்டிய இந்த பிரமிடில் இருபாலரும் பூசை செய்து வந்தனர். அதில் ஒரு பெண் பூசாரி அந்த குலத்தின் மன்னை காதலித்தாக கூறப்படுகிறது. கடவுக்காக கொடுக்கப்பட்டள் யாரையும் காதலிக்கக்கூடாது எனக்கூறி அந்த மன்னனி கையால் அப்பெண் அந்த பிரமிடின் உச்சியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக வாய்வழி கூறும் கதைகள் இன்றும் கூறப்படுகின்றன. அதைத் தொர்ந்து அந்த பிரமிடு மனித பலிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஒன்று இடிந்து விழுந்துள்ளதை, மெக்சிகோ உள்ளூர் பழங்குடியினரின் வம்சாவளியினர், இது பூமியின் கெட்ட காலமாக இருக்கலாம் என கவலைப்படுகின்றனர்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த வம்சாவளி மக்கள் கூறுகையில், பிரமிடுகளின் இந்த நிலைக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதன் தலைவர் கூறுகையில், இது பூமிக்கு வரவிருக்கும் பேரழிவின் அறிகுறியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ரோடும் இல்ல, தண்டவாளமும் இல்ல; ஆனாலும் உலகின் 12வது பெரிய நாடு பற்றி தெரியுமா?
மெக்சிகோவில் பெய்த கனமழை காரணமாகவே இந்த பிரமிடு சரிந்து விழுந்ததாக தொல்பொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 30ம் தேதி முதல், கனமழையால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பணியாளர்கள், பிரமிடின் எந்தெந்த பகுதிகள் சேதமடைந்துள்ளன என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதி உட்பட மொத்த பிரமிடின் கட்டமைப்பை சரி செய்ய மெக்சிகோ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.