
தொடரும் நிலநடுக்கம் : கால நிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உணரப்பட்ட நில நடுக்கம் தற்போது துருக்கியில் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. குலு மாகாணத்தில் 14 கிலோமீட்டர் சுற்றளவில் நிலம் அதிர்ந்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குலு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் துருக்கி தலைநகர் அங்காராவிலும் உணரப்பட்டது என்று மக்கள் தெரிவித்தனர். அங்காராவில் நிலம் அதிர்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். குலு மாகாணத்தில் அதன் தீவிரம் அதிகமாக இருந்தது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது. தற்போதைய தகவலின்படி, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நேற்று காலையில் கிரீஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து துருக்கியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 78 கிலோமீட்டர் சுற்றளவில் பரவியது. இதன் விளைவாக இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்டானிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
2023ல் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, பின்னர் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கத்தில் 59,000 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சிரியாவையும் பாதித்தது. சிரியாவில் 8,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.