உக்ரைனின் லிவிவ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்... 35 பேர் பலி; 60 பேர் படுகாயம்!!

By Narendran S  |  First Published Mar 13, 2022, 6:17 PM IST

உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா வான்வழி தாக்குல் நடத்தியதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். 


உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா வான்வழி தாக்குல் நடத்தியதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 18 ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல கட்டிடங்கள் உருகுலைந்தன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர். குறிப்பாக, போலந்து எல்லையில் உள்ள லிவிவ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு முன்பிருந்தே வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும் இரவுகளில் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலி கேட்டதாக லிவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். லிவிவ் நகரிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள யாவோரிவ் ராணுவப் பயிற்சி மைதானம் குண்டுவீச்சில் சேதமடைந்திருக்கிறது.

முதலில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கடந்த சில நாட்களாக மேற்குப் பகுதி நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு எல்லை வழியே, போலந்து மூலம் போர்த் தளவாடங்களையும் ஆயுதங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பி வருகின்றன. இதை அடுத்து உக்ரைனின் மேற்குப் பகுதி நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியதில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

click me!