கண்ணிமைக்கும் நேரத்தில் 30 ராணுவ வீரர்கள் துடிதுடித்து இறந்தனர்...!! 10 பேர் உயிருக்கு போராட்டம்..!!

Published : Jan 06, 2020, 01:04 PM ISTUpdated : Jan 06, 2020, 01:36 PM IST
கண்ணிமைக்கும் நேரத்தில் 30 ராணுவ வீரர்கள் துடிதுடித்து இறந்தனர்...!!  10 பேர் உயிருக்கு போராட்டம்..!!

சுருக்கம்

இந்நிலையில் திரிபோலியில் உள்ள ராணுவ பள்ளி மீது இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது .    

லிபியாவில் உள்ள ராணுவ பள்ளி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  சுமார் 30 பேர் பலியாகியுள்ளனர் . சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  லிபியாவில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவரும்,  சர்வாதிகாரி எனப்பட்டவருமான  மும்மர் கடாபி கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார் .   வறுமை ,  வேலைவாய்ப்பின்மை காரணங்களால் நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டு நாட்டு ராணுவத்திற்கு எதிராக உள்நாட்டுப் போரில் இறங்கினர் .

இந்நிலையில்   அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது ,  உங்களை என் முன்னாள் ராணுவ தளபதி  கலிப்பா கப்தார் தலைமையலானோர் லிபியா தேசிய இடைக்காலப் பேரவையில் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர் .   இந்நிலையில் கலிப்பாக தலைமையிலான குழு தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர் .  இந்நிலையில் திரிபோலியில் உள்ள ராணுவ பள்ளி மீது இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது .  

இதில் ராணுவப் பள்ளியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 30 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் சுமார்  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .  படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . சிகிச்சையில் உள்ளவர்களுக்கு   ரத்த தானம் செய்யும்படி சுகாதாரத்துறை நாட்டுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது .   ஆனாலும் தாக்குதல் சம்பவத்திற்கு கப்தார் படையினர் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்