புயல் வேகத்தில் பாய்ந்த கார்... அமெரிக்காவில் பயங்கர விபத்தில் 3 இந்திய வம்சாவளி மாணவர்கள் பலி!

By SG Balan  |  First Published May 22, 2024, 1:40 PM IST

மே 14ஆம் தேதி ஜார்ஜியாவின் அல்பரெட்டாவில் இந்த கார் விபத்து நடந்துள்ளது. அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்றது பயங்கர விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.


கடந்த வாரம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த பயங்கர கார் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.

18 வயதான ஐந்து மாணவர்களும் அல்பரெட்டா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். மே 14ஆம் தேதி ஜார்ஜியாவின் அல்பரெட்டாவில் இந்த கார் விபத்து நடந்துள்ளது. அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்றது பயங்கர விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். புயல் வேகத்தில் பாய்ந்து சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஆர்யன் ஜோஷி மற்றும் ஸ்ரீயா அவசராலா இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தனர். அன்வி சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மாணவர்கள் ரித்வாக் சோமேபள்ளி மற்றும் முகமது லியாகத் இருவரும் அல்பரெட்டாவில் உள்ள வடக்கு ஃபுல்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நயன்தாரா முதல் சமந்தா வரை... பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்ல பிசினஸ்லயும் இவங்க தான் டாப்!

ஸ்ரீயா அவசரலா யுஜிஏ ஷிகாரி நடனக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அன்வி ஷர்மா யுஜிஏ கலகார் மற்றும் கேபல்லா குழுவில் பாடகராக இருந்தார்.

அற்புதமான நடனக் கலைஞரை இழந்துவிட்டதாக ஷிகாரி நடனக் குழு ஸ்ரீயா அவசராலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அன்வி சர்மாவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக கலகார் குழு தெரிவித்துள்ளது.

ஆர்யன் ஜோஷி அடுத்த வாரம் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். அல்பரெட்டா கிரிக்கெட் அணியிலும் இருந்திருக்கிறார். அவருக்கு அணி நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் அருகே பல வாகனங்கள் மோதியதில் தெலுங்கானாவைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர்கள் பலியானார்கள். பியோரியாவில், 19 வயதான நிவேஷ் முக்கா மற்றும் கௌதம் குமார் பார்சி இருவரும் பயணித்த கார் மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.

விமானத்தில் ஸ்டாண்டிங்! இண்டிகோ விமானத்தில் நின்றுகொண்டே சென்ற பயணியால் பரபரப்பு!

click me!