ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய 18 இந்தியக் கப்பல்கள்.. வீட்டு கேஸ் சிலிண்டர்களுக்கு மேலும் சிக்கல்?

Published : Mar 31, 2026, 03:02 PM IST
Hormuz

சுருக்கம்

சிக்கியுள்ள 18 இந்தியக் கப்பல்களில், 3 எல்பிஜி டாங்கர்கள், 1 எல்என்ஜி கப்பல் மற்றும் 4 கச்சா எண்ணெய் டாங்கர்கள் உள்ளன. ஒரு காலியான டாங்கரில் எல்பிஜி நிரப்பப்பட்டு வருகிறது.

மேற்கு ஆசியாவில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் 18 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் தற்போது சிக்கியுள்ளன. இதில் கச்சா எண்ணெய், எல்பிஜி (LPG) மற்றும் எல்என்ஜி (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அடங்கும்.

18 இந்திய கப்பல்கள் நிறுத்தி வைப்பு

ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் 18 இந்தியக் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 4 எல்பிஜி டேங்கர்கள், 4 கச்சா எண்ணெய் டேங்கர்கள், 1 எல்என்ஜி கப்பல் மற்றும் கொள்கலன் கப்பல்கள் (Container ships) அடங்கும். இந்த 18 கப்பல்களிலும் சேர்த்து மொத்தம் 485 இந்திய மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உறுதி

இந்தியக் கப்பல்கள் தவிர, இந்தியாவிற்கு எரிபொருட்களை ஏற்றி வரும் 10 வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல்களும் அங்கு சிக்கியுன. இது தொடர்பாக பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா, ''இந்தியாவிற்கு வர வேண்டிய 10 வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல்களில், 3 எல்பிஜி கப்பல்கள், 4 கச்சா எண்ணெய் டாங்கர்கள் மற்றும் 3 எல்என்ஜி கப்பல்கள் உள்ளன.

காப்பீட்டு பிரீமியம் உயர்வு

சிக்கியுள்ள 18 இந்தியக் கப்பல்களில், 3 எல்பிஜி டாங்கர்கள், 1 எல்என்ஜி கப்பல் மற்றும் 4 கச்சா எண்ணெய் டாங்கர்கள் உள்ளன. ஒரு காலியான டாங்கரில் எல்பிஜி நிரப்பப்பட்டு வருகிறது. இந்தக் கப்பல்களில் மொத்தம் 485 மாலுமிகள் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் கப்பல்களுக்கான காப்பீட்டு பிரீமியம் (Insurance Premium) கடுமையாக உயர்ந்துள்ளது. போருக்கு முன்பு காப்பீட்டு மதிப்பில் 0.04 சதவீதமாக இருந்த பிரீமியம், தற்போது 0.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இது இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று சின்ஹா தெரிவித்தார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40%, எல்என்ஜி இறக்குமதியில் 50%, மற்றும் எல்பிஜி (சமையல் எரிவாயு) இறக்குமதியில் 90% இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்கு இந்தக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டால், உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆகவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?