ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!

Published : Mar 23, 2026, 10:34 PM IST
Colombia plane crash

சுருக்கம்

கொலம்பியாவில் ராணுவத்துக்குச் சொந்தமான C-130 ஹெர்குலிஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்ததால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கொலம்பியாவில் ஒரு பெரிய ராணுவ விமான விபத்து நடந்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராணுவத்தின் C-130 ஹெர்குலிஸ் ரக விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் என்று கூறப்படுகிறது.

ராணுவ விமானம் விபத்து

இந்த விமானம், Puerto Leguizamo என்ற இடத்திலிருந்து புறப்பட்டபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு ஏதோ காரணத்தால் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இருந்ததால், இந்த விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்புகள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ராணுவ வீரர்கள் நிலை என்ன?

ஆனாலும், இதுவரை இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.விபத்து நடந்த உடனேயே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. உள்ளூர் நிர்வாகமும், ராணுவக் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை ஆராய்ந்து வருகின்றன. விரைவில் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?