life-style
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பச்சைப் பாலில் ஃப்ளூ வைரஸ் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
சூடுபடுத்திய பாலில் இல்லாத சில சத்துக்கள் பச்சைப் பாலில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், இது உடல்நலக் கேட்டுக்கு வழிவகுக்கும்.
பச்சைப் பால் குடிப்பதால் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும். இதனால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது.
பச்சைப் பாலை பாஸ்டுரைசேஷன் செய்வதே சிறந்த வழி. இதை வீட்டிலேயே செய்யலாம்.
பச்சைப் பாலை நடுத்தர தீயில் 161°F வரை சூடுபடுத்த வேண்டும். உணவு வெப்பமானியைப் பயன்படுத்தி வெப்ப நிலையை செக் செய்யலாம்.
பால் 161°F வெப்பநிலையை அடைந்ததும், குறைந்தது 15 விநாடிகள் அந்த வெப்பநிலையிலேயே வைத்திருக்கவும். இதனால் சத்துக்கள் குறையாமல், கிருமிகள் அழிக்கப்படும்.
பாலை அடுப்பிலிருந்து இறக்கி சுத்தமான பாத்திரத்தில் ஊற்றவும். பின்னர் அதனை ஐஸ் தண்ணீரில் வைத்து 40°F-க்கு குறைவான வெப்பநிலையில் விரைவாகக் குளிர வைக்கவும்.