life-style
நாளுக்கு நாள் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் சிறுநீரக நோயைத் தடுக்கலாம். சில பழக்கங்கள் அதை சேதப்படுத்தும்.
சரிவர தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகங்கள் பாதிக்கும். குறைந்த அளவு தண்ணீர் அல்லது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகங்களில் அழுத்தம் அதிகரித்து தொற்றுகள் ஏற்படும்.
அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இவை இரண்டும் சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்களாகும்.
ஜங்க் ஃபுட்டில் சோடியம், ப்ரிசர்வேடிவ்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இவை சிறுநீரக சேதத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
நீண்ட நேரம் உட்காருவது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இவை சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும்.
சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் தொற்றுகள், சிறுநீரகத்தில் கற்கள் வர வாய்ப்புள்ளது.
சில வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்துவது சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கும்.