life-style
வீட்டை துடைக்க பயன்படுத்தப்படும் மாப்பை கண்டிப்பாக சுத்தமாக வைக்க வேண்டும். இல்லையெனில் அதன் மூலம் கிருமிகள் பரவும்.
மாப்பை ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டால் அதில் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் உருவாகி, சீக்கிரமாகவே சேதமடைந்து விடும். எனவே, மாப்பை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு காணலாம்.
இதற்கு ஒரு வாளியில் சூடான நீரை ஊற்றி அதில் அழுக்கான மாப்பை போட்டு சுமார் 5 நிமிடம் அப்படியே வைத்து, பிறகு தண்ணீரில் நன்கு அலசி, வெயிலில் காயவைத்து பயன்படுத்தவும்.
ஒரு வாளியில் சூடான நீரை ஊற்றி அதில் எலுமிச்சை சாறு கலந்து 15 நிமிடம் மாப்பை அதில் ஊற வைத்து, தண்ணீரில் அலசி, காய வைத்து பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் மாப் வாசனையாக இருக்கும்.
இதற்கு ஒரு வழியில் சூடான நீரில் சலவை சோப்பு பொடி கலந்து, அதில் பத்து நிமிடம் மாப் ஊற வைக்கவும். பின் தண்ணீரில் அலசி காய வைத்து பயன்படுத்தவும்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் மாப் பயன்படுத்தி பிறகு அதை தண்ணீரில் நன்கு அலசி வெயிலில் காயவைத்தால், அதிலிருந்து துர்நாற்றம், வீசாது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வராது.