life-style
அதிக சர்க்கரை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சரும பிரச்சனைகள் வரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது பிற உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் நீங்கள் விரைவில் வயதாகிவிடுவீர்கள்.
சர்க்கரையில் பலவிதமான இரசாயனங்கள் உள்ளன. இவை நமது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை நிறுத்திவிடும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உருவாகும்.
ஆம் சர்க்கரை முகப்பருக்களை உண்டாக்கும். ஏனெனில் இது இன்சுலினை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து முகப்பருக்கள் உருவாகும்.
அதிக சர்க்கரை சாப்பிட்டால் உங்கள் சரும செல்களில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் குறையும். இதனால் உங்கள் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறண்டு போகும்.
சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறையும். மேலும் சருமம் வறண்டு போகும்.
அதிக சர்க்கரை சாப்பிட்டால் சொரியாசிஸ் வரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் சருமம் சிவப்பாகவும், வறண்டதாகவும் மாறும்.