மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளன.
மாம்பழத்தில் சர்க்கரை உள்ளதால் இது செரிமான செயல்முறையை மெதுவாக்கும். மேலும் வாயு, அஜீரணம், வயிற்று வலி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் இரவில் மாம்பழம் சாப்பிட்டால் திடீரென ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இது உடல் நலத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
இரவில் மாம்பழம் சாப்பிட்டால் அதில் இருக்கும் கலலோரி தேவைக்கு அதிகமான சக்தியை உடலுக்கு வழங்கும். இதனால் உடல் உறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுக்க முடியாமல் போகும்.
மாம்பழத்தால் உடலுக்கு தேவைக்கதிகமான சக்தி கிடைத்து தூங்க முடியாமல் போகும். சரியான தூக்கம் இல்லையெனில் உடல் உறுப்புகள் சீர்கெட்டுவிடும்.
மாம்பழத்தில் இருக்கும் கலோரிகள் சரியாக எரிக்கப்படாமல் உடலில் சர்க்கரையாக அல்லது கொழுப்பாக சேர்ந்து விடும். அதிகப்படியான கொழுப்பு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
மாம்பழம் சீசனில் மட்டும் கிடைக்கும் பழம் என்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் அதை பகலில் மட்டுமே சாப்பிடுங்கள்.