health
பச்சை மிளகாய்-10, பூண்டு-8, வேர்க்கடலை–2 தேக்கரண்டி, கடுகு– தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு – 1 , தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு
ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் மிளகாய், வேர்க்கடலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.இதனால் மிளகாயின் காரம் சற்று குறைந்து தேசாயின் சுவை அதிகரிக்கும்.
மிக்ஸியில் வறுத்த மிளகாய், பூண்டு, வேர்க்கடலையை சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இதை மிகவும் நைசாக அரைக்க வேண்டாம், தேசாய் சற்று கொரகொரப்பாக இருந்தால் நல்ல சுவையுடன் இருக்கும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். அவை பொரிந்தவுடன், இந்த தாளிப்பை தயாராக உள்ள தேசாயின் மேல் ஊற்றவும்.
இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனால் தேசாயின் சுவை மேலும் அருமையாக இருக்கும்.
கொத்தமல்லி இலையால் அலங்கரித்து சூடான பரோட்டா, பக்கோரா அல்லது கேழ்வரகு ரொட்டியுடன் பரிமாறவும்.