health
ஜிம் உடற்பயிற்சிகள் செய்பவர்கள் கூட தினமும் நடைப்பயிற்சி செய்தால் கூடுதல் நன்மைகளை பெறுவர்.
ஜிம் உடற்பயிற்சிகள் உடலின் வலிமையை அதிகரித்தாலும் அதனை நடைபயிற்சியின் ஒட்டுமொத்த நன்மைகளுடன் ஒப்பிடவே முடியாது.
அதிதீவிர ஜிம் பயிற்சிகளை விட குறைந்த அழுத்தம் கொண்டது வாக்கிங். மூட்டுகளை உயவூட்டும். இரத்த ஓட்டம் மேம்படும்.
தீவிர உடற்பயிற்சியை விட நடைபயிற்சி அதிக மன அழுத்தத்தை குறைத்து சீரான முறையில் இதயத் துடிப்பை அதிகரிக்கும்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின்படி, நாள்தோறும் 30 நிமிடம் விறுவிறுப்பாக நடந்தால் இதய நோய் அபாயம் 19% வரை குறையும்.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வந்த ஆய்வில் தினமும் நடப்பவர்களுக்கு அகால மரணம் ஏற்படும் வாய்ப்பு 20 முதல் 30% குறைவு.
சாப்பாட்டுக்கு பின் வெறும் 10 முதல் 15 நிமிட வாக்கிங் சென்றால் இரத்த சர்க்கரை அளவு உயர்வதை கட்டுப்படுத்த முடியும்.
ஜிம்மில் செய்யும் அதிதீவிர உடற்பயிற்சிகளை விட நடைபயிற்சியில் மன அமைதி கிடைக்கும். இயற்கை சூழலில் நடந்தால் படைப்பாற்றல் மேம்படும்.
ஜிம் போகாவிட்டால் கூட தினமும் நடைபயிற்சி செய்வது எண்ணற்ற நன்மைகளைத் தரும் என்பதை மறுக்கமுடியாது