health
சியா விதைகளை சுமார் 30-45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதுவே சப்ஜா விதைகளை 5-10 நிமிடங்களில் மட்டுமே ஊற வைத்தால் போதும்.
சுய விதை லேசான கொட்டை சுவையை கொண்டது. ஆனால் சப்ஜா விதையில் சுவையில்லை. ஜெல் போன்றது.
சியா விதை கருப்பு, வெள்ளை மற்றும் வெளிபழுப்பு நிறம் கலந்து இருக்கும். அதுவே சப்ஜா விதை முழுவதுமாக கருப்பு நிறத்தில் இருக்கும்.
சியா விதையில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவு உள்ளன. சப்ஜா விதையில் நார்ச்சத்து இருந்தாலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக உள்ளது.
சியா மற்றும் சப்ஜா விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால், இவை இரண்டும் எடை இழப்புக்கு நன்மை பயக்கும்.
உங்களுக்கு ஒமேகா-3, புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் வேண்டுமானால் சியா விதை சிறந்த தேர்வு. உடலை குளிர்ச்சியாகவும், செரிமான அமைப்பை சீராகவும் வைக்க விரும்பினால் சப்ஜா விதை சிறந்த தேர்வு.
சப்ஜா விதை உடலை குளிர்ச்சியாக வைக்கும். எனவே கோடை காலத்திற்கு இது பெஸ்ட். சியா விதை காரத்தன்மையுடையதால் குளிர்காலத்தில் இதை சாப்பிடுங்கள்.