Relationship
ஒவ்வொரு கணவரும் இந்த 6 விஷயங்களில் தனது மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று சாணிக்க சொல்லுகிறார். இது அன்பு, நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஒவ்வொரு கணவரும் தனது மனைவிக்கு முழு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும். மேலும் வீட்டு விஷயங்களில் அவளுடைய ஆலோசனையை கேளுங்கள். இதனால் வீட்டில் அமைதி நிலவும்.
கணவன் தன் மனைவிக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனைவிக்கு துணையாக கணவன் நிற்க வேண்டும்.
கணவன் தனது சம்பளத்தை மனைவியின் கைகளில் கொடுக்க வேண்டும். இது வீட்டில் வறுமையை தடுத்து செல்வத்தை பெருகச் செய்யும்.
கணவன் தனது மனைவிக்கு அன்பு மற்றும் மரியாதை கொடுக்க வேண்டும். இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அடித்தளமாகும்.
மனைவி உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வது போல நீங்களும் அவளுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அன்பு, மரியாதை கொடுங்கள்.
கணவன் மனைவியிடையே தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். இது அவர்களது திருமண வாழ்க்கையை என்றென்றும் மகிழ்ச்சியாக வைக்கும்.