cinema
ராஷ்மிகா மந்தனா, ரிஷப் ஷெட்டியின் 'கிரிக் பார்ட்டி' மூலம் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா: தி ரைஸ் படத்தில் ரஷ்மிகா நடித்ததன் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலம் ஆனார். இவரை நேஷ்னல் கிரஷ் என ரசிகர்கள் கொண்டாட துவங்கினர்.
2023 ஆம் ஆண்டு, ரன்பீர் கபூர் ஜோடியாக 'அனிமல் படத்தில் நடித்தார் ராஷ்மிகா. இந்த படம் இந்தியாவில் 553.87 கோடி ரூபாய் வசூல் செய்தது.
டிசம்பர் 4, 2024 அன்று வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. இப்படம் இந்தியாவில் 1234.1 கோடி ரூபாய் வசூல் செய்தது.
2025 ஆம் ஆண்டில், வெளியான சாவா திரைப்படத்தில் மகாராணியாக ராஷ்மிகா நடித்திருந்த நிலையில், இப்படம் இந்திய அளவில் 598.8 கோடி ரூபாய் வசூல் செய்தது.
சமீபத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த, சிக்கந்தர் திரைப்படம் இதுவரை105.72 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ரஷ்மிகா மந்தனாவின் நான்கு படங்களின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் 2,492.49 கோடி ரூபாய். சிகந்தர் மற்றும் சாவா திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ரஷ்மிகா மந்தனா அடுத்து ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இது தீபாவளி 2025 அன்று வெளியாகவுள்ளது.