cinema
கவர்ச்சி நடிகையாக பிரபலமானவர் புவனேஸ்வரி. இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. சினிமாவில் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார்.
அப்போது திடீரென செய்யாத குற்றத்துக்காக இவர் மீது வழக்கு போடப்பட்டது. இதனால் புவனேஷ்வரி பல அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது.
3 ஆண்டுகள் தைரியமாக வழக்கை எதிர்கொண்டு போராடிய புவனேஸ்வரி இறுதியில் விடுதலை செய்யப்பட்டார். புவனேஷ்வரி தனது சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றார்.
வழக்கிலிருந்து விடுதலை கிடைத்தாலும், அபாண்டமான குற்றச்சாட்டினால் ஏற்பட்ட வேதனை அவரை விட்டு நீங்கவில்லை. நீண்ட காலம் மன உளைச்சலுடன் இருந்தார்.
தமிழ்நாட்டில் வறுமையான குடும்பத்தில் பிறந்து, நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர் புவனேஷ்வரி. தனது கடின உழைப்பால் முன்னேறி, சினிமாவிலும் சீரியலிலும் வெற்றி பெற்றார்.
இப்போது புவனேஸ்வரி சென்னையில் எல்லாம் துறந்த துறவி போல வாழ்ந்து வருகிறார். அவருக்குச் சொந்தமாக சில ஷூட்டிங் பங்களாக்கள் உள்ளன. அதன் மூலம்தான் வருமானம் கிடைக்கிறது.
வளசரவாகக்கத்திலும் கோயம்பேட்டிலும் உள்ள இரண்டு கோவில்களில் தினசரி அன்னதானம் வழங்கி வருகிறார். தீபாவளி வந்தால், ஏழைகளுக்கு வேட்டி சேலை கொடுக்கிறார்.
சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் இருந்து முன்னேறி வந்ததால், இப்போது பசியில் இருப்பவர்களுக்கு சாப்பாடு போட விரும்புவதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகை புவனேஸ்வரி.