வாட்ஸ்அப்பில் புதிய மெட்டா AI விட்ஜெட்! பயன்படுத்துவது எப்படி?

Published : Mar 09, 2025, 10:33 AM ISTUpdated : Mar 09, 2025, 10:56 AM IST
வாட்ஸ்அப்பில் புதிய மெட்டா AI விட்ஜெட்! பயன்படுத்துவது எப்படி?

சுருக்கம்

வாட்ஸ்அப் செயலியில், மெட்டா AI விட்ஜெட் சோதனை செய்யப்படுகிறது. இது, செயலியை திறக்காமலேயே AI அம்சங்களை பயன்படுத்த உதவும். பயனர்கள் ஹோம் ஸ்கிரீனில் இருந்தே கேள்விகள் கேட்கலாம், படங்களை பதிவேற்றலாம், வாய்ஸ் மோடில் உரையாடலாம்.

உலகளவில் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், செயலியை விட்டு வெளியேறாமலேயே பயனர்கள் AI இன் அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. இப்போது, ​​டெவலப்பர்கள் ஒரு புதிய மெட்டா AI (Meta AI) விட்ஜெட்டை பரிசோதித்து வருகின்றனர். இது விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் செயலியைத் திறக்காமலே AI அம்சத்தைப் பயன்படுத்த உதவும்.

சில மாதங்களுக்கு முன்பு WABetaInfo முதன்முதலில் இதுபற்றி அறிவித்திருந்தது. இந்த விட்ஜெட், இப்போது சமீபத்திய பீட்டா வெர்ஷனில் இருக்கிறது என ஒரு சில வாட்ஸ்அப் பயனர்கள் கூறியுள்ளனர். புதிய Meta AI விட்ஜெட், வாட்ஸ்அப் செயலியைத் திறந்து சாட்பாட்டிற்குள் சென்று கேள்விகளைக் கேட்கவேண்டிய அவசியத்தை அகற்றியுள்ளது என்றும் பயனர்கள் மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் இருந்தே நேரடியாக படங்களை பதிவேற்றவும், AI சாட்பாட்டின் வாய்ஸ் மோடு (Voice Mode) மூலம் உரையாடவும் வழிவகை செய்திருக்கிறது என ஒரு பயனர் சொல்லியிருக்கிறார்.

WABetaInfo பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில் இருந்து, வாட்ஸ்அப்பின் புதிய மெட்டா AI விட்ஜெட் தேவையான அளவுக்கு மாற்றி அமைக்கும் வசதி கொண்டது என்று தெரிகிறது. பயனர் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப எளிதாக அளவை மாற்ற முடியும். ஆனால், இந்த வசதி மெட்டா AI வசதி கொண்ட வாட்ஸ்அப் வெர்ஷனை பயன்படுத்தினால்தான் இந்த விட்ஜெட் கிடைக்கும்.

மெட்டா நிறுவனத்தின் லாமா எல்.எல்.எம். மூலம் இயக்கப்படும் வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா AI, ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி போல பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், படங்களை உருவாக்கவும் செய்கிறது. தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களில் கூட இதனைப் பயன்படுத்தப்படலாம். கோடிக்கணக்கான பயனர்கள் ஏற்கனவே வாட்ஸ்அப்பில் மெட்டா AI அம்சத்தைப் பயன்படுத்துவதால், இந்த புதிய விட்ஜெட் மூலம் சாட்பாட் பயன்பாட்டை இன்னும் அதிகரிக்க முடியும்.

மெட்டா படிப்படியாக புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில், வாட்ஸ்அப் 22 புதிய சாட் தீம்கள், டேப் ரியாக்‌ஷன்கள், செல்ஃபி ஸ்டிக்கர்கள் மற்றும் பகிரக்கூடிய ஸ்டிக்கர் பேக்குகள் போன்ற பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்