Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!

Published : Sep 25, 2026, 05:51 PM IST
TRAI Mandates New Voice And SMS Only Recharge Plans With 30 Days Validity

சுருக்கம்

TRAI new guidelines : இன்டர்நெட் டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் மட்டும் அடங்கிய புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது.

மொபைல் போனை வெறும் போன் பேசவும், மெசேஜ் அனுப்பவும் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ். இன்டர்நெட் டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதி மட்டும் கொண்ட புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் - TRAI) உத்தரவிட்டுள்ளது.

30 நாட்கள் வேலிடிட்டி பிளான்கள்

2026-ம் ஆண்டின் டெலிகாம் நுகர்வோர் பாதுகாப்பு 13-வது திருத்த விதிகளின்படி, 30 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்ட ஸ்பெஷல் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் வவுச்சர்களை டெலிகாம் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். இதில் டேட்டா வசதி இருக்காது என்பதால், அதற்கேற்ப கட்டணமும் குறைவாகவே இருக்க வேண்டும் என டிராய் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், இன்டர்நெட் பயன்படுத்தாதவர்கள் தேவையில்லாமல் டேட்டாவுக்கு பணம் கட்டுவது தவிர்க்கப்படும்.

மாதா மாதம் ஒரே தேதியில் ரீசார்ஜ்

30 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட குறைந்தபட்சம் ஒரு வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் பிளானையாவது அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் வழங்க வேண்டும். இந்த பிளான்களை ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் புதுப்பிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஒருவேளை அந்த மாதத்தில் குறிப்பிட்ட தேதி இல்லை என்றால், அந்த மாதத்தின் கடைசி நாளன்று பிளான் ரினியூ ஆகும். உதாரணமாக, ஒரு பிளான் ஒவ்வொரு மாதமும் 31-ம் தேதி ரினியூ ஆக வேண்டும் என்றால், 31 நாட்கள் இல்லாத மாதங்களில் அந்த மாதத்தின் கடைசி நாளில் ரினியூ செய்யப்படும்.

தற்போது நீண்ட கால பிளான்களே அதிகம்

தற்போது டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் பிளான்கள் பெரும்பாலும் நீண்ட கால வேலிடிட்டி கொண்டவையாகவே உள்ளன என டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது 80, 84, 336 அல்லது 365 நாட்கள் வேலிடிட்டியில் தான் இந்த பிளான்கள் கிடைக்கின்றன. இதனால் குறைந்த நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய அளவில் ஆப்ஷன்கள் இல்லை. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட மக்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப குறுகிய கால ரீசார்ஜ் செய்ய இந்த புதிய நடைமுறை பெரிதும் உதவும் என டிராய் தெரிவித்துள்ளது.

தற்போதைய ரீசார்ஜ் கட்டணங்கள்

தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் மட்டும் அடங்கிய ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகின்றன. ஜியோவின் 3 மாத பிளான் ரூ.448-க்கும், வருடாந்திர பிளான் ரூ.1748-க்கும் கிடைக்கிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ.1849-க்கு வருடாந்திர பிளான்களை வழங்குகின்றன. இவற்றின் 3 மாத பிளான்கள் முறையே ரூ.469 மற்றும் ரூ.470-க்கு கிடைக்கின்றன.

புதிய பிளான்களின் விலை என்ன?

டிராயின் இந்த புதிய உத்தரவால், தற்போதுள்ள நீண்ட கால பிளான்களுடன் சேர்த்து, குறைந்த வேலிடிட்டி கொண்ட பல புதிய ரீசார்ஜ் ஆப்ஷன்களும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இந்த புதிய பிளான்களின் சரியான கட்டணங்களை டெலிகாம் நிறுவனங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாடு மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்ய இந்த புதிய சிஸ்டம் மிகவும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mivi One 5G: வெறும் 12 ஆயிரத்துக்கு ஒரு சூப்பர் 5G போன்.. பீச்சர்ஸ்ல குறையே இல்லை!
Smartphone Safety: மழை பெய்யும்போது போனுக்கு சார்ஜ் போடுறீங்களா..? இந்த ஒரு தவறு ஆபத்தை வரவழைக்கலாம்