ரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஐபோன்..... ஆப்பிள் இந்தியா ரி-செல்லர் அதிரடி..!

By Kevin KaarkiFirst Published May 16, 2022, 4:23 PM IST
Highlights

ஆன்லைன் தளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனை காலக்கட்டங்களில் ஐபோன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படும். 

ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க பிரபலமானவை ஆகும். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் வாழ்நாளில் புது ஐபோன் வாங்கிட வேண்டும் என ஆசை கொண்டிருப்பர். புது ஐபோன் மாடல்களின் விலை எப்போதும் அதிகளவில் நிர்ணயம் செய்யப்படுவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விலை அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

விலை அதிகமாக இருக்கும் நிலையிலும், ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆன்லைன் விற்பனை வலைதளங்கள் சார்பில் ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகள் அவ்வப் போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் தளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனை காலக்கட்டங்களில் ஐபோன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படும். 

அந்த வகையில்  ஆப்பிள் சாதனங்களை விற்பனை செய்து வரும் ஐஸ்டோர் இந்தியா ஐபோன் SE3 மாடலுக்கு அசத்தல் சலுகைகளை வழங்கி வருகிறது. ஐஸ்டோர் இந்தியா சலுகைகளின் படி ஐபோன் SE3 மாடலை அனைத்து சலுகைகளுடன் வாங்கும் போது குறைந்த பட்சமாக ரூ. 29 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். இந்திய சந்தையில் ஐபோன் SE3 மாடல் ரெட், மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

சலுகை விவரங்கள்:

ஐபோன் SE3 (64GB): விலை ரூ. 43 ஆயிரத்து 990

கேஷ்பேக் சலுகையை சேர்க்கும் போது ரூ. 42 ஆயிரத்து 900

எக்சேன்ஜ் விலை (கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் போனஸ்- ஐபோன் 8 64GB மாடல் நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் பட்சத்தில்) ரூ. 29 ஆயிரத்து 990

ஐபோன் SE3 (128GB): விலை ரூ. 48 ஆயிரத்து 900

கேஷ்பேக் சேர்த்தால் ரூ. 47 ஆயிரத்து  900

எக்சேன்ஜ் விலை (கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் போனஸ்- ஐபோன் 8 64GB மாடல் நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் பட்சத்தில்) ரூ. 34 ஆயிரத்து 990


ஐபோன் SE3 (256GB): விலை ரூ. 58 ஆயிரத்து 900

கேஷ்பேக் சேர்த்தால் ரூ. 57 ஆயிரத்து  900

எக்சேன்ஜ் விலை (கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் போனஸ்- ஐபோன் 8 64GB மாடல் நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் பட்சத்தில்) ரூ. 44 ஆயிரத்து 990

அம்சங்கள்:

ஐபோன் SE3 மாடலில் 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே, 750x1334 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் A15 பயேனிக் பிராசஸர், 12MP பிரைமரி கேமரா, 7MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இகன் கேமரா f/1.8 வைடு ஆங்கில் லென்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் டீப் பியுஷன், ஸ்மார்ட் HDR 4 மற்றும் போட்டோகிராபிக் ஸ்டைல்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியை வழங்குகிறது. 

click me!