கருணாநிதி பற்றி இணையத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் `கலைஞர்' என்ற சொல் இந்தியாவுக்குப் பின் அதிகம் தேடப்பட்டது. கருணாநிதி என்ற பெயரை மட்டும் 58 நாடுகளில் தேடியுள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைபெற்றுவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்ததால் கடந்த 28ஆம் தேதி அதிகாலையில் சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவரது ரத்த அழுத்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டது. அதற்குப் பிறகு, 29ஆம் தேதி மாலையில் திடீரென அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. பிறகு மருந்தின் மூலமே அவரது உடல்நலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலநலக் குறியீடுகள் சாதாரண நிலைக்கு வந்தன.
இந்நிலையில், கருணாநிதி பற்றி இணையத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் `கலைஞர்' என்ற சொல் இந்தியாவுக்குப் பின் அதிகம் தேடப்பட்டது. கருணாநிதி என்ற பெயரை மட்டும் 58 நாடுகளில் தேடியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கலைஞர் என்ற சொல் 2 லட்சத்துக்கும் அதிகமாகவும், கருணாநிதி, காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அன்று ஜுலை 28-ஆம் தேதி 20 ஆயிரத்துக்கும் மேலானோர் காவேரி ஹாஸ்பிட்டல் என கூகுளில் தேடியுள்ளனர்.
கலைஞர் என்ற சொல் இந்தியாவுக்கு பின் அதிகம் தேடப்பட்ட நாடுகள் என்றால், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், ஒமன் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள்.
இதேபோல தொடர்ந்து "கருணாநிதி" என்ற பெயரை உலகில் உள்ள 58 நாடுகளில் தேடியுள்ளனர்.
இந்திய அளவில் பார்த்தால், தமிழ்நாட்டிற்கு பின் அதிகம் தேடிய மாநிலம் என்றால் அது புதுவை , அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி என்று மட்டும் தேடாமல், அவரின் பெயரோடு சேர்த்து கலைஞர் ஹெல்த் kalaignarHealth ,கருணாநிதி ஹெல்த் "karunanidhiHealthLiveUpdate" லைவ் அப்டேட், கருணாநிதி போன்றவைகளும் தேடப்பட்டுள்ளன.
குறிப்பாக காவேரி மருத்துவமனை கருணாநிதி குறித்து அறிக்கையில் கூறியிருந்த "Transient Setback" என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. இதையும் இணையதள வாசிகள் அதிகம் தேடியுள்ளனர்.
தமிழகத்தில், திருவள்ளுர் மாவட்டத்தில் அடுத்து கருணாநிதியின் புகைப்படங்கள் அதிகம் தேடப்பட்டது அவரின் சொந்த ஊரான திருவாரூரில் தான், யூடியூப்பில் கருணாநிதி குறித்து வீடியோக்கள் அதிகம் தேடிய மாநிலம் என்றால் அது தமிழ்நாடு அதிலும் கோவை தான் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.