டியர் ஸ்டூடண்ட்ஸ்... ஸ்கிரீன் டைம் குறைய இதைப் பண்ணுங்க... பிரதமர் மோடி கொடுக்கும் எக்ஸாம் டிப்ஸ்!

By SG Balan  |  First Published Feb 4, 2024, 12:09 PM IST

தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவிகள் தொழில்நுட்பத்தை விட்டு ஓடாமல், அதை நேர்மறையாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை கூறினார்.


டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7வது ஆண்டாக நடைபெற்ற 'பரிக்‌ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், பிரதமர் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் வீரர்களான மாணவ மாணவிகளுடன் உரையாடினார் அவர்களுடன் மொபைல் ஃபோன்களின் பயன்பாடு, பெற்றோர்-குழந்தை உறவுகள் என பல தலைப்புகளில் கலந்துரையாடினார்.

மொபைல் அப்ளிகேஷன்கள் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, "எல்லாவற்றையும் அதிகமாக பயன்படுத்துவது மோசமானது" என்று கூறியதுடன், மாணவர்கள் ஸ்கிரீன்களைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 2 கோடி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

“நான் மொபைல் போன்களை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்துகிறேன். மொபைலில் ஸ்கிரீன் டைம் பற்றி எச்சரிக்கும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். அதன் மூலம் உங்கள் ஸ்கிரீன் நேரத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம்" என்றார். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளின் மொபைல் போன் பாஸ்வேர்டை அறிந்திருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Tech Tips: ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

"மொபைல் மட்டுமில்லாமல் எதையும் அளவுக்கு மீறி பயன்படுத்துவது யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது. எல்லாவற்றிற்கும் ஒரு தரநிலை இருக்க வேண்டும், அதற்கு ஒரு அடிப்படை உள்ளது. எதையும் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதில் விவேகம் இருப்பது மிகவும் முக்கியம். தொழில்நுட்பத்தை விட்டு ஓடாமல், அதை நேர்மறையாக பயன்படுத்த வேண்டும்" என்றும் ஆலோசனை கூறினார்.

“கேட்ஜெட்களைப் பயன்படுத்துவது நேரத்தைக் கண்காணிக்கும் கருவிகளுடன் கூடியதாக இருக்க வேண்டும். உங்கள் கேஜெட் ஸ்கிரீனைப் பார்க்கும் நேரத்தைக் கண்காணிக்கும் அப்ளிகேஷன்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது நேரத்தை மதிக்க மறக்கக் கூடாது. தொழில்நுட்பத்தை நேர்மறையாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

தேர்வுக்குத் தயாராகும்போது சிறிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். “சில சமயங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார்கள். தேர்வுக்குத் தயாராகும்போது நீங்கள் சிறிய இலக்குகளை நிர்ணயித்து, உங்கள் செயல்திறனை படிப்படியாக மேம்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இந்த வழியில் திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் தேர்வுக்கு முன் முழுமையாக தயாராக இருக்க முடியும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

AI வாய்ஸ் எப்படி இருக்கும்? சைபர் கிரிமினல்களை ஈசியா கண்டுபிடிக்க சில டிப்ஸ்!

click me!