மெமரி நிரம்பினால், அதன் விளைவாக மொபைலின் செயல்திறன் குறைகிறது. வாட்ஸ்அப்பில் மீடியா கோப்புகளைத் தானாகவே சேமிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்வு காணலாம்.
தகவல்தொடர்பை எளிதாக்கும் அப்ளிகேஷன்களில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp) மொபைல் பயனர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதில் பகிரப்படும் அதிகப்படியான மல்டிமீடியா கோப்புகள் மொபைல் போனில் மெமரி பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்.
மெமரி நிரம்பினால், அதன் விளைவாக மொபைலின் செயல்திறன் குறைகிறது. வாட்ஸ்அப்பில் மீடியா கோப்புகளைத் தானாகவே சேமிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்வு காணலாம்.
வாட்ஸ்அப்பில் மீடியா கோப்பைப் பதிவிறக்கும் போது, அது தானாகவே உங்கள் போன் கேலரியில் சேமிக்கப்படும். இது இயல்பாக எல்லா மொபைலிலும் இருக்கும் அமைப்பு ஆகும். இதை மாற்ற Settings பகுதிக்குச் சென்று Chat என்பதற்குள் இருக்கும் Media Visibilty என்பதை Off செய்யவும்.
தனிப்பட்ட உரையாடல் அல்லது குழு உரையாடல்களிலும் இதேபோல Media Visibilty என்பதை Off செய்து வைக்கலாம். ஆனால், இந்த மாற்றம் இதுவரை பதிவிறக்கம் செய்யப்பட்ட மீடியாவை கோப்புகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
செட்டிங்ஸில் இந்த மாற்றத்தைச் செய்வதால் தனிப்பட்ட மற்றும் குழு உரைடாயடலில் வரும் மீடியா கோப்புகள் தானாகவே டவுன்லோட் செய்யப்பட்டு கேலரியில் சேமிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். இதனால், மொபைல் கேலரி சுத்தமாக இருப்பதுடன் மெமரியும் மிச்சம் பிடிக்கப்படும்.
குறிப்பிட்ட உரையாடல்களில் மட்டும் Media Visibilty அமைப்பை மாற்றி அமைத்துக்கொள்ளவும் வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. இதனால், மொபைல் கேலரியில் அதிக அளவு போட்டோ மற்றும் வீடியோக்கள் சேமிக்கப்படுவதை கட்டுப்படுத்துகிறது.