எங்கேயும் எப்போதும் இன்டர்நெட் இல்லாமலே கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை பயன்படுத்தலாம்! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

By SG Balan  |  First Published Nov 11, 2023, 6:52 PM IST

கூகுள் டிரைவை ஆஃப்லைனில் பயன்படுத்த, நீங்கள் கூகுள் டிரைவில் offline access என்ற ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இதை கம்ப்யூட்டரில் இருந்து செய்யலாம். அல்லது மொபைல் ஆப் மூலமும் செய்யலாம்.


கூகுள் டிரைவ் இப்போது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. ஆவணங்கள் மற்றும் கோப்புகளை சேமிப்பதற்கும், பகிர்வதற்கும் கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. இதில் பல பயனுள்ள ஆன்லைன் அம்சங்கள் இருந்தபோதாலும், இன்டர்நெட் இல்லாமல் அவற்றை பயன்படுத்த முடியாது.

இதற்காகத்தான் இணைய வசதி இல்லாத சந்தர்ப்பங்களில் கூகுள் டிரைவில் உள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கான வழியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் வழங்கும் இந்த ஆஃப்லைன் வசதியை பயன்படுத்தி இணைய இணைப்பு இல்லாமல் கூகுள் டிரைவில் உள்ள கோப்புகளை பயன்படுத்தலாம்.

Tap to resize

Latest Videos

undefined

மிகவும் பயனுள்ள இந்த வசதியை பயன்படுத்தி எப்படி கூகுள் டிரைவை ஆஃப்லைனில் இயக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஆஃப்லைனில் இருக்கும்போது கூகுள் டிரைவில் இருக்கும் பைல்களை அணுக முடியாதே என்று கவலையை விட்டுவிடலாம்.

எக்கச்சக்க ஆஃபர் இருக்கு... ஆனா ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது 5 விஷயத்துல எச்சரிக்கையா இருக்கணும்!

கூகுள் டிரைவை ஆஃப்லைனில் பயன்படுத்த, நீங்கள் கூகுள் டிரைவில் offline access என்ற ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இதை கம்ப்யூட்டரில் இருந்து செய்யலாம். அல்லது மொபைல் ஆப் மூலமும் செய்யலாம்.

எப்படி பயன்படுத்துவது?

கம்ப்யூட்டரில் https://drive.google.com என்ற கூகுள் டிரைவ் முகவரிக்குச் சென்று உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். வலது பக்க மூலையில் உள்ள கியர் ஐகானை கிளிக் செய்து Settings பகுதிக்குச் செல்லவேண்டும். பின், Offline என்பதற்குக் கீழ் உள்ள "Create, open, and edit your recent Google Docs, Sheets, and Slides files on this device while offline" என்பதை டிக் செய்து Save பட்டனை கிளிக் செய்யவும்.

இதையே கூகுள் டிரைவ் மொபைல் ஆப் மூலம் செய்ய, கூகுள் டிரைவ் செயலில் உள்ள Settings பகுதிக்குச் சென்று, Offline access என்பதை ஆன் செய்யவும். இனி நீங்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜனில் சேமித்து வைத்திருக்கும் முக்கியமான கோப்புகளை ஆஃப்லைனிலும் பயன்படுத்த முடியும்.

உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி? வல்லுநர்கள் கொடுக்கும் ஐடியா

click me!