
Airtel Free OTT Plans: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் இன்று ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் புதிய இணையற்ற பொழுதுபோக்குப் பேக்குகளை அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ் உள்ளிட்ட 25+ சிறந்த OTT தளங்களின் தொழில்துறை முன்னணி போர்ட்ஃபோலியோவை அணுகுவதன் மூலம் இவ்வளவு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை இந்தியாவில் ஏர்டெல் மட்டுமே வழங்குகிறது.
ஏர்டெல் அறிமுகம் செய்த மாஸ் பிளான்கள்
1 மாதத்துக்குச் செல்லுபடியாகும் ரூ.279 என்ற கவர்ச்சிகரமான அறிமுக விலையில் தொடங்கி ரூ.750 மதிப்புள்ள பல்வேறு பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களை வாடிக்கையாளர்கள் அணுகலாம். இதன் மூலம் இவ்வளவு பரந்த OTT ஸ்ட்ரீமிங் விருப்பத்தேர்வுகளை அணுக அனுமதிக்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. வரம்பற்ற பொழுதுபோக்கு வசதிக்காக வரம்பற்ற 5G டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் கொண்ட பொழுதுபோக்குப் பேக்குகளை நிறுவனம் ரூ.598 இல் தொகுத்து வழங்குகிறது.
ஏர்டெல் அறிமுகப்படுத்திய ஓடிடி பிளான்களின் லிஸ்ட்:
1. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆப் வழியாக நேரடிச் சந்தா
இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
செல்லுபடியாகும் காலம்: 1 மாதம்
விலை: ரூ.279
2. ப்ரீபெய்டு மட்டும் உள்ளடங்கிய பேக்குகள்
இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
செல்லுபடியாகும் காலம்: 1 மாதம்
விலை: ரூ.279
3. ஒரு மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா உள்ளிட்ட பேக்
இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
விலை: ரூ.598
4. ஒரு மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா உள்ளிட்ட பேக்
இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
செல்லுபடியாகும் காலம்: 84 நாட்கள்
விலை: ரூ.1729
ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி சந்தா இலவசம்
வாடிக்கையாளர்கள் இப்போது நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ், லயன்ஸ்கேட்ப்ளே, ஏஎச்ஏ, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், ஈஇராஸ்நவ், மற்றும் ஷெமாரூமீ போன்ற முன்னணி OTT தளங்களில் இருந்து பல்வேறு வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை ஒரே தொகுப்பின் மூலம் அணுகலாம். இந்தப் பல்வேறு OTT சேவைகளை ஒரு மலிவு விலை தொகுப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களின் மாறிவரும் பொழுதுபோக்கு விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயல்கிறது.
படங்கள், வெப் சீரிஸ்களை கண்டு ரசிக்கலாம்
இது தனிப்பட்ட சந்தாக்களை நிர்வகிப்பதில் சிக்கல்கள் இல்லாமல் அவர்களின் விருப்பமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் அசல் உள்ளடக்கம் உட்பட 16 க்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச, பாலிவுட் மற்றும் பிராந்திய உள்ளடக்கத்தை சிரமமின்றி கண்டுகளிக்க உதவுகிறது. இந்த உத்திசார்ந்த முயற்சி ஏர்டெல்லின் மதிப்பு முன்மொழிவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத வசதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பத்தேர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.