கழிவறையில் கற்பழிக்க முயன்ற பூசாரி! கதறி ஓடி வந்த பெண்! சென்னையில் பரபரப்பு...

Published : Sep 04, 2018, 05:56 PM ISTUpdated : Sep 09, 2018, 07:40 PM IST
கழிவறையில் கற்பழிக்க முயன்ற  பூசாரி! கதறி ஓடி வந்த பெண்! சென்னையில்  பரபரப்பு...

சுருக்கம்

கோயிலுக்கு சென்ற பள்ளி மாணவியை கோவில் அருகே உள்ள கழிவறைக்கு அன்பாக பேசி அழைத்துச்சென்று கற்பழிக்க முயன்ற அர்ச்சகரை போலீஸ் கைது செய்துள்ளது.

கோயிலுக்கு சென்ற பள்ளி மாணவியை கோவில் அருகே உள்ள கழிவறைக்கு அன்பாக பேசி அழைத்துச்சென்று கற்பழிக்க முயன்ற அர்ச்சகரை போலீஸ் கைது செய்துள்ளது.

சென்னை முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி , 11 ம் வகுப்பு படித்து வருகிறார். அருகில் கங்கையம்மன் கோயிலுக்கு சென்று வரும் இவர் கோயில் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இந்த சந்தர்பத்தில் மாணவியிடம் அன்பாக பேசுவது போல் நடித்த 62 வயது மதிப்புடைய கோயில் அர்ச்சகர் நடராஜ் கோவில் அருகில் எண். 61 புதுத்தெருவில் உள்ள கட்டிடம் ஒன்றின் கழிவறைக்கு அழைத்து சென்று கற்பழிக்கும் முயற்சி செய்துள்ளார். 

இதனையடுத்து, அந்த அர்ச்சகரிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி சத்தம் போட்டு கதறி இருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

இதனையடுத்து தகவளிரிந்து வந்த போலீசார் அர்ச்சகரை பிடித்து விசாரித்ததில்  கடந்த 2 ஆண்டுகளாக மாணவியிடம் அன்பாக பேசுவது போல் நடித்து அடிக்கடி சில்மிஷத்திலும்,  பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் துறைமுகம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அர்ச்சகர் நடராஜனை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!