
உயிருக்கு உயிராக காதலித்த பெண் தனக்கு கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தன்னை தானே கத்தியால் குத்திகொண்டு சம்பவம் பார்த்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் இவர் ஒரு பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் முகநூளில் ஏற்பட்ட நட்பால் பழகி இருவரும் காதலித்து வந்துள்ளனர். தாம் விரும்பிய அந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள இளைஞர் ஆசைப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவரது வீட்டில் பார்த்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட சுரேஷ்குமார், இன்று காலை நேராக காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காதலி பார்த்ததும் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்த கத்திக் குத்தினால் சுரேஷ்குமாரின் உடலிலிருந்து ரத்தம் அதிகமாக கொட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்து நிலைகுலைந்த சுரேஷ்குமார் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இந்த பயங்கர சம்பவத்த பார்த்த அங்கிருந்தவர்கள் சுரேஷை தூக்கிக் கொண்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலி கண்முன்னே கத்தியால் இளைஞர் குத்தி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.