
நடுவானிலிருந்து விமானம் திடீரென தரை இறங்க பல காரணங்கள் இருக்கலாம்...அது மோசமான வானிலையாகவோ,அல்லது திடீரென விமானத்தில் ஏற்பட்ட பிரச்னை அல்லது பயணிக்கு திடீரென ஏற்படும் உடல் நல பாதிப்பு ...என சில காரணங்களை சொல்லலாம்.....
ஆனால் முதல் முறையாக, விமானத்தில் மோதிய பறவையால் அவசர அவசரமாக விமானத்தை தரை இறக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
காரணம் :
விமானத்தில் பறவை மோதியது மட்டும் அல்ல பிரச்சனை....அந்த மாபெரும் பறவை அதிவேகமாக வந்துக்கொண்டிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் மோதியதால், பலத்த சேதம் அடைந்துள்ளது.
ஒரு கட்டத்திற்கு மேல் விமானத்தை இயக்குவது பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த விமானி மிகவும் சாதுர்த்தியமாக உடனடியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரைஇறக்கி உள்ளார்
சென்னையில் இருந்து கத்தார் நாட்டில் உள்ள தோஹாவுக்கு 134 பயணிகளுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் ( British Airways) விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயேபறவை மோதி சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக 134 பயணிகளும் உயிர் தப்பினர்.இதனால் இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு அதிகாலை வேறு விமானத்தில் 134 பயணிகளும் பயணித்தனர்.
இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.இதுவரை பலமுறை விமானத்தில் பறவை மோதியதாக செய்திகளை கேள்விப்பட்டிருப்போம்
ஆனால் பறவை மோதியதால் விமானம் சேதமடைந்து உடனடியாக தரை இறக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இது தான் உலக அளவில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நடுவானில் பறந்தாலும் இது போன்ற அரிய சம்பவங்கள் நடைபெறும் என்பதை தான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது...