நகைக்கடையில் வளையல்களை அலேக்காக திருடும் பெண்கள் - அதிர்ச்சி வீடியோ!!

Asianet News Tamil  
Published : Jun 21, 2017, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
நகைக்கடையில் வளையல்களை அலேக்காக திருடும் பெண்கள் - அதிர்ச்சி வீடியோ!!

சுருக்கம்

women robbing bangles from jewel shop

தென்காசியில் நகைகள் வாங்குவது போல் நடித்து வளையல்களை  திருடிச் சென்ற இரண்டு பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சதுக குற்றங்கள், திருட்டு, கொலை உள்ளிட்டவற்றை ஈசியா கண்டுபிடிக்க வந்ததுதான் சிசிடிவி. பெரும்பாலான குற்றச் செயல்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இரண்டு பெண்கள் நகைக்கடைக்கு வந்து நகை வாங்குவதுபோல் நடித்து வளையல்களை அபேஸ் பண்ணிச்சென்ற சுவாரஸ்யமான காட்சி தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த வாரம் நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்ற இரண்டு பெண்கள் வளையல்கள் வாங்க வேண்டும் என கூறினர்.

அந்த கடையில்ன் விற்பனையாளர் அந்த பெண்களுக்கு டிரேவில் உள்ள  நகைகளை எடுத்துக் காண்பித்துள்ளார்.

விற்பனையாளர் சற்று அசந்த நேரத்தில் ஒரு பெண் வளையலைத் திருடி அருகில் உள்ள பெண்ணிடம் கொடுத்தார். சற்று ரேத்தில் அவர்கள் தங்களுக்கு அங்கு இருந்த நகைகள் பிடிக்கவில்லை என்று கூறி வெளியேறிவிட்டனர்.

முதலில் இது குறித்து அறிந்திராத நகைக்கடை உரிமையாளர், பின்னர் ஸ்டாக் எடுக்கும்போது போது நகையின் எண்ணிக்கை குறைவதையறிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது பெண்கள் இருவர் நகையை திருடியது தெரியவந்தது. இது குறித்து தென்காசி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலம்.. இது தான் பாதுகாப்பான மாநிலமா..? முதல்வருக்கு தவெக கேள்வி
உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிப்.8ல் பிரமாண்ட விழா நடத்தும் ஜாக்டோ ஜியோ