கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக கணவனை கொன்ற மனைவி; இயற்கை மரணம் என்று நாடகம்...

 
Published : Jun 01, 2018, 08:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக கணவனை கொன்ற மனைவி; இயற்கை மரணம் என்று நாடகம்...

சுருக்கம்

wife killed her husband to be with her illegal lover

நாகப்பட்டினம்
 
நாகப்பட்டினத்தில் கள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ கணவனை கொன்றுவிட்டு, நெஞ்சுவலியில் இறந்தார் என்று நாடகமாடிய மனைவியை காவலாளர்கள் கைது செய்தனர். 

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவில் அருகே உள்ள திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருடைய மகன் அறிவழகன் (38). எலக்ட்ரீசியனான இவருடைய மனைவி ரேகா (34). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அறிவழகன் திடீரென உயிரிழந்தார். எவ்வாறு இறந்தார்? என்று உறவினர்கள் கேட்டதற்கு மனைவி ரேகா, "தனது கணவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதனை தாங்க முடியாமல் அவர் இறந்ததாகவும்" குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கதறி அழுதுகொண்டே கூறினார். 

ஆனால், இறந்துபோன அறிவழகனின் உடலில் காயம் இருந்ததால் உறவினர் இளஞ்சியம் என்பவர் அறிவழகனின் சாவில் மர்மம் இருப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவழகனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்து அவரது உடலை, காவலாளர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

அதனைத் தொடர்ந்து அறிவழகனின் உடல், அப்பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் செம்பனார்கோவில் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். 

பின்னர், அறிவழகனின் உடற்கூராய்வு அறிக்கை அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இறந்துபோன அறிவழகனின் மனைவி ரேகாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையில் ரேகாவுக்கும், செம்பனார் கோவில் அருகே மேலையூர் மேலவெளி பகுதியைச் சேர்ந்த கலியன் மகன் ராஜசேகர் (31) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 

இதனை தெரிந்துகொண்ட அறிவழகன், மனைவி ரேகாவை கண்டித்துள்ளார். அதனை பொருட்படுத்தாத ரேகா, ராஜசேகருடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டபோது ரேகா, கணவர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று தனது கள்ளக்காதலன் ராஜசேகரிடம் தெரிவித்தார். 

அதன்படி, அறிவழகன் தூங்கிக் கொண்டிருந்தபோது ரேகாவும், ராஜசேகரும் சேர்ந்து அவருடைய முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, துடிக்க, துடிக்க கொலை செய்துள்ளனர்.

பின்னர் ரேகா, மறுநாள் காலை தனது கணவர் அறிவழகன் இரவு தூங்கும்போது நெஞ்சுவலியால் இறந்துவிட்டார் என்று கூறி நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்துள்ளார்" என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து காவலாளர்கள் ரேகாவையும், அவருடைய கள்ளக்காதலன் ராஜசேகரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?
பச்சைக்கொடி காட்டிய பழனிசாமி.. என்.டி.ஏ.வில் இணையும் ஓபிஎஸ், டிடிவி.. உருவாகும் மெகா கூட்டணி!