
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பரஸ்பரம் தன்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொண்டு பதவி ஏற்பது தான் இதனால் வரை சட்டப்பேரவையில் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு பரஸ்பர மரியாதை கூட செலுத்தாமல் பதவி ஏற்று கொண்டார்.