புதுச்சேரியில் ரேட்டு கிடுகிடு! ஆட்டம் கண்ட சரக்கு லவ்வர்ஸ்!

 
Published : Oct 10, 2017, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
புதுச்சேரியில் ரேட்டு கிடுகிடு! ஆட்டம் கண்ட சரக்கு லவ்வர்ஸ்!

சுருக்கம்

whiskey brandy wine rates are increased in puducheri

தீபாவளி நேரம் என்பதால்,  புதுச்சேரியில் சரக்குகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இது, சரக்கு பிரியர்களும் குடிமகன்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மிகவும் சிறிய இடம்தான் என்றாலும், சரக்கு என்றால் சென்னையிலிருந்தும் சரி, தமிழகத்தின் அருகில் உள்ள இடங்களில் இருந்தும் சரி, பலரும் ஓடுவது புதுச்சேரிக்குத்தான். அங்கே விலைக்குறைவு என்பதுடன் ரொம்ப சுவை, தரம் என்றெல்லாம் ஒரு கருத்து குடி பிரியர்களின் மத்தியில் நிலவுகிறது. 

விடுமுறையைக் கழிக்க என்றால், உடனே சென்னைவாசிகள் கூட ஓடுவது புதுச்சேரிக்குதான். அங்கே சென்று சுதந்திரமாக இருப்பதை மது பிரியர்கள் அதிகம் விரும்புகின்றனர். அவர்களுகு அதிர்ச்சி தரும் வகையில், மது வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது புதுவை அரசு. 

தீபாவளி நேரம் என்பதால் உயர்த்தப்பட்ட மதுவகைகளின் 
விலை  விவரம் 

விஸ்கி ரூ 68 லிருந்து  - ரூ. 75க்கு உயர்ந்துள்ளது. 

ரம்  ரூ  78 லிருந்து - ரூ 90 கும் 

பிராந்தி ரூ 85லிருந்து   -ரூ 100  என உயர்ந்துள்ளது. 

சாதாரணமாகச்  சொல்ல  வேண்டும் என்றால் 20  ரூபாய்  வரை மது வகைகளின் விலைகள் உயர்ந்துள்ளன  எனலாம்.  இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு  வந்துள்ளது. இந்தத் தகவலைக் கேட்டதும், குடிமகன்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

மதவெறியைத் தூண்டி இளைஞரின் உயிரைப் பறித்த பாஜக.. திருமா ஆவேசம்
கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்