காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் - தமிழகத்துடன் கைகோர்க்கும் புதுச்சேரி... என்ன செய்யப்போகிறது மத்திய அரசு..!

 
Published : Mar 28, 2018, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் - தமிழகத்துடன் கைகோர்க்கும் புதுச்சேரி... என்ன செய்யப்போகிறது மத்திய அரசு..!

சுருக்கம்

What is the Government of India to do with Puducherry

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், எந்தவித அதிகாரமுமில்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்காமல், அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றன.

இதனிடையே கர்நாடகாவில் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள், காவிரி விவகாரத்திற்கு பொருந்தாது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் பிரகாஷ் ராவத் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதைதொடர்ந்து இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசும் அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!