நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை..13 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை அப்டேட்..

Published : Jun 04, 2022, 02:22 PM IST
நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை..13 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக,

04.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

05.06.2022. 06.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.

07.06.2022. 08.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

04.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, கேரளா கடலோரப்பகுததிகள்‌, இலட்சத்தீவு பகுதிகள்‌, குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மேற்கு
திசையிலிருந்து மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

 05.06.2022: தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, கேரளா கடலோரப்பகுதிகள்‌, இலட்சத்தீவு பகுதிகள்‌, குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று
மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

07.06.2022. 08.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, இலட்சத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய கேரளா கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌
வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu Women Loan Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.30 லட்சம் வரை கடனை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! எவ்வளவு வட்டி? விண்ணப்பிப்பது எப்படி?
Vijayabaskar Join DMK: யூடர்ன் அடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! இணையபோகும் கட்சி தவெகவா? திமுகவா? வெளியான தகவல்