
கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில், அடுத்த 2 நாட்களில் குறைந்த அளவிலேயே இருந்தது. பின்னர், மேக மூட்டத்துடன் இருந்த வானம், மாநிலத்தின் பல இடங்களில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக கலவரமாக வெயில் அடிக்கிறது. காற்றில் தூசு பறந்து வந்து விழுந்தாலும் உடலின் அந்த பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில், கத்திரி வெயிலின் தாக்கத்தால், அனல் கற்று வீசும். இதனால், யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வட தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீசும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.