ராமநாதபுரத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுவாட்ஸ் பள்ளி அருகே மேல் தேக்க நீர் தொட்டி உள்ளது. இங்கிருந்து தான் அப்பகுதி மற்றும் சுற்றவட்டார பகதுி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தொட்டி போதிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
undefined
அந்த தொட்டியில் இருந்து கடந்த 2 நாட்களாகவே துர்நாற்றம் வீசி வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து ஊழியர்கள் வந்து பார்த்த போது, ரத்த கறைகளுடன் பிளேடு ஒன்றும், ஒரு ஜோடி செருப்பும் இருந்துள்ளது. மேலும் தொட்டிக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு நீர் தேக்க தொட்டியில் வீசி சென்றார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனே குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு, சுத்தப்படுத்தும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில் சேகரித்து வைத்துள்ள தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.