இரண்டு மடங்காக அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து; குடிநீர், பாசனத்திற்கு 1300 கனஅடி நீர் திறப்பு…

 
Published : Aug 18, 2017, 07:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
இரண்டு மடங்காக அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து; குடிநீர், பாசனத்திற்கு 1300 கனஅடி நீர் திறப்பு…

சுருக்கம்

Water level of Mettur dam doubly increased

சேலம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் சுற்றியுள்ள மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை கை கொடுக்காததால் குறித்த நேரத்தில் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்தாண்டும் இதே நிலை நீடித்து வந்ததால் கடந்த 1-ஆம் தேதி கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனிடையே கடந்த சில நாள்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாகவும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.77 அடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 535 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இருமடங்காக அதிகரித்து வினாடிக்கு 21 ஆயிரத்து 947 கனஅடியாக வந்தது.  இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்காவும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை பாசன கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று மாலை 6 மணி முதல் பாசன கால்வாயில் வினாடிக்கு 600 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. பொதுப்பணித் துறையின் நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி கால்வாய் பாசன மதகை திறந்து வைத்தார். அப்போது தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நேற்று வினாடிக்கு 700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!