கொளத்தூரில் ஸ்டாலின் கோட்டை சரிந்ததா? முதல்வரையே தடம் மாற வைத்த தமிழக வி.எஸ். பாபுவின் அதிரடி முன்னிலை

Published : May 04, 2026, 12:45 PM IST
கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு; தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு அதிரடி!

சுருக்கம்

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு, முதல்வர் மு.க. ஸ்டாலினை விட 2,278 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று 'ஜெயண்ட் கில்லராக' உருவெடுத்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாக இன்று பதிவாகி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் 10:30 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட 199 தொகுதிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், திமுக மட்டும் 40 இடங்களில் முன்னிலையில் பெற்று மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலின் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் தொகுதியாக கொளத்தூர் மாறியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு, ஆரம்பச் சுற்றுகளிலிருந்தே முன்னிலை வகித்து வருவது தமிழகத்தையே உற்றுநோக்க வைத்துள்ளது.

75 வயதான வி.எஸ். பாபு, ஏற்கனவே திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதும், பிப்ரவரி 2026-ல் தவெகவில் இணைந்தவர். இவர் தனது வேட்புமனுவில் ₹3.7 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், எவ்விதக் கடன்களும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மூன்றாம் சுற்று முடிவில் இவர் முதலமைச்சரை விட 2,278 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வேட்புமனுத் தாக்கல் மற்றும் முக்கியத்துவம்

இந்த நிலையில் முதல்வர் தொகுதியில் முன்னிலையில் இருக்கும் வி.எஸ். பாபு யார் உள்ளிட்ட விவரங்களை மக்கள் இணையத்தில் தேட ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன்படி, முதல்வர் தனது மனுவைத் தாக்கல் செய்த அதே நாளில் இவரும் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள்

தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, 75 வயதான வி.எஸ். பாபுவின் பொருளாதார மற்றும் தனிப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

கல்வி மற்றும் தொழில்: இவர் 8ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர், தற்போது பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

சொத்து மதிப்பு: இவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு ₹3.7 கோடி ஆகும்.

வருமானம்: இவரது ஆண்டு வருமானம் ₹4.5 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மற்றும் வழக்குகள்: ஆச்சரியப்படும் விதமாக, தமக்கு எவ்விதக் கடன்களும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் ஏதுமில்லை.

அரசியல் பின்னணி மற்றும் தவெக பயணம்

வி.எஸ். பாபு ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி . 2006ஆம் ஆண்டு திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார். பின்னர், திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார்.

பிப்ரவரி 7 விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது தவெகவின் கூட்டுப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.

தேர்தல் களம் மற்றும் தற்போதைய நிலவரம்

கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடும் வி.எஸ். பாபு, தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, திறந்தவெளி வாகனங்களில் அவர் மேற்கொண்ட ரோடு ஷோக்கள் மற்றும் பேரணிகள் இளைஞர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன.

இன்று (மே 4) நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், வி.எஸ். பாபுவின் வேட்புமனுத் தாக்கலின் போது இருந்த எதிர்பார்ப்பு உண்மையாகியுள்ளது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?