மதுரையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு மாவட்ட நிர்வாகி மருதுபாண்டி என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் அவருடைய நண்பர்கள் பித்தளையால் செய்யப்பட்ட நீளமான வாளை பரிசாக வழங்கினார்கள்.அந்த நீளமான பட்டாக்கத்தியால் மருதுபாண்டி பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இதை நண்பர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மாநகர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மீண்டும் ஆயுத கலாச்சாரம் தலைதூக்குகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. இந்த செயல் தவறான முன்னூதாரணம் என்பதால் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனக்கூறப்பட்டது. பின்னர் அதுகுறித்து விளக்கம் அளித்தார் நடிகர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.